கதிர்வீச்சு வெளியேறுவது தடுக்கப்படும்: ஜப்பான் பிரதமர் உறுதி

 
கதிர்வீச்சுவெளியேறுவதுதடுக்கப்படும்:  உலையில் இருந்து கதிர்வீச்சு கடலுக்குள் வெளியேறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.
தீவிர கதிர்வீச்சுடன் கூடிய 300 டன் அளவிலான தண்ணீர் தினந்தோறும் கடலுக்குள் கலப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணு உலையை குளிர்விக்க தினமும் 400 டன் தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது.
இந்த தண்ணீர் தான் கதிர்வீச்சுடன் வெளியேறுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ள அரசு, தற்போது அணு உலையை இயக்கி வரும் அமைப்பிடம் விடாமல் அரசே இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக உறுதி அளித்துள்ளது. மேற்கொண்டு தண்ணீர் வெளியேறாமல் இருக்க தற்காலிக சுவர் ஒன்று அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துவரும் மோக்கன் மக்களின் முதல் எதிரி




இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துவரும் மோக்கன் மக்களின் முதல் எதிரி

       க்கள் நகரங்களிலும், கிராமங்களிலும் வசிப்பார்கள். இன்னும் சிலர் காடுகளில் வசிப்பார்கள். அப்படியில்லாமல் கடலிலேயே வசிக்கும் மக்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட கடல் மக்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
     நிரந்தர இருப்பிடம் இல்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை நாடோடிகள் என்போம். ஆனால், மோக்கன் (MOKEN) என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் கடலிலேயே நாடோடிகளாக வாழ்கிறார்கள். இந்தப் பழங்குடியினர் கடலை விட்டு பிரிவதில்லை. எப்போதாவதுதான் நிலப் பகுதிக்கு வருவார்கள்.
    தாய்லாந்து, மியான்மார் போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் அந்தமானிலும் இந்த இனத்தவர் அதிகம் காணப்படுகின்றனர். கடலைப் பற்றியும், கடலில் வாழும் தாவரங்கள், உயிரினங்கள் என அனைத்தைப் பற்றியும் இவர்களிடத்தில் அபார அறிவு காணப்படுகிறது. சிறிய வலைகள், ஈட்டி போன்றவற்றை கொண்டு இந்த மோகென் மக்கள் கடல் வேட்டைக்கு செல்கின்றனர். தங்களுக்குத் தேவையான உணவபு பொருள் தவிர, பிற உட்கொள்ள முடியாத பிற பொருட்களை எடுத்து வந்து அவற்றை விற்பனை செய்து பிழைக்கின்றனர்.
இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துவரும் மோக்கன் மக்களின் முதல் எதிரி
     எந்த உபகரணத்தின் உதவியும் இன்றி, கடல் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை துல்லியமாக பார்க்கும் திறன் இந்த இனச் சிறுவர்களுக்கு கூட உண்டு.கபாங் எனப்படும் இவர்களே தயாரித்த படகுகளில் கடலை சுற்றியபடியே வாழ்ந்து வருகின்றனர். இந்தப் படகுகள் வெறும் போக்குவரத்துக்கு மட்டுமன்றி, பெரும்பாலான நேரங்களில் சமையலறையாகவும், படுக்கையறையாகவும் கூட மாறிவிடுகின்றன.
    2004ஆம் ஆண்டு சுனாமியில் பல லட்சம் மக்கள் உயிரிழந்தபோதும், கடலில் ஏற்பட்ட மாற்றங்களை கண்கூடாக அறிந்த இந்த மோக்கன் மக்கள் தங்கள் உயிரை சுலபமாக காத்துக்கொண்டனர். நூற்றுக் கணக்கானோரை காப்பாற்றவும் செய்தனர். அதன் பிறகுதான் ஊடகங்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியது.
    இப்படி இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்துவரும் மோக்கன் மக்களின் முதல் எதிரி, எண்ணெய் எடுக்கும் திட்டங்கள்தான். கடலிலுள்ள எண்ணெய் வளங்களை எடுப்பதற்காக, அரசுகளும், நிறுவனங்களும் இவர்களை வலுக்கட்டாயமாக இடம் பெயரச் செய்கின்றன. மியான்மர் அரசு இவர்களை வெளியேற்ற ராணுவத்தைப் பயன்படுத்தியது. கடலோடு மட்டுமே வாழ தெரிந்த இந்த பழங்குடியினரை கட்டாயத்தின்பேரில் இயற்கையிடமிருந்து பிரிக்கும் முயற்சிகளுக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மரங்களின் தேவையை உணர்த்தும் வகையில் தூத்துக்குடியில் பனை உணவுத் திருவிழா

 நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வரும் பனை மரங்களின் தேவையை உணர்த்தும் வகையில் தூத்துக்குடியில் பனை உணவுத் திருவிழா நடைபெற்றது.
   மில்லர்புரத்தில் நடைபெற்ற விழாவில், பனை மரத்தில் இருந்து பெறப்படும் பதனீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கிழங்கு, பனங்கற்கண்டு ஆகியவற்றுடன் பனைக் கூடைகள், பாய்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
   கருப்பட்டி மற்றும் பனைப் பொருட்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழாவிற்கு வந்தவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. உணவுத் திருவிழாவில் கருப்பட்டி தோசை, அப்பம் உள்ளிட்டவற்றை மக்கள் பெரிதும் விரும்பி சாப்பிட்டனர்.

தூத்துக்குடியில், 19-வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை


  தூத்துக்குடியில், 19-வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளனர்.
 அந்த பெண்ணை, அதே ஊரை சேர்ந்த தனுஷ்கோடி என்ற 55 வயது முதியவரும், 45 வயதான சின்னசாமி என்பவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்துள்ளது.
 பாதிக்கப்பட்ட பெண் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் கருத்தரித்திருப்பது தெரிவந்துள்ளது. அதனால், அதிர்சியடைந்த பெற்றோர், அவரிடம் விசாரித்த போது நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.
 குற்றம்சாட்டப்பட்ட இருவரும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். அதனால், பாதிக்கப்பட்டவர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளனர்.

                                           -பசுமை நாயகன்



தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கொள்ளை போகும் கனிமவளங்கள்



தமிழகத்தின் தென் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கனிம வளங்கள் சுரண்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
     தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்கரை மணலில் ஏராளமான கனிம வளங்கள் நிறைந்துள்ளன. இந்த கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக தினசரி பல ஆயிரம் டன் மணல் கடலோரங்களில் இருந்து அள்ளப்படுகிறது.
 விதிமுறைகளை மீறி இவ்வாறு மணல் அள்ளப்படுவதால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் மாசடைவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மட்டுமின்றி, கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
 நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை, விஜயாபதி, கூட்டப்புளி, பெருமணல் போன்ற பகுதிகளில் மீன் வளம் மட்டுமின்றி விவசாயமும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

                                                                                 -பசுமை நாயகன்