கதிர்வீச்சு வெளியேறுவது தடுக்கப்படும்: ஜப்பான் பிரதமர் உறுதி

 
கதிர்வீச்சுவெளியேறுவதுதடுக்கப்படும்:  உலையில் இருந்து கதிர்வீச்சு கடலுக்குள் வெளியேறுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.
தீவிர கதிர்வீச்சுடன் கூடிய 300 டன் அளவிலான தண்ணீர் தினந்தோறும் கடலுக்குள் கலப்பதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணு உலையை குளிர்விக்க தினமும் 400 டன் தண்ணீர் பம்ப் செய்யப்படுகிறது.
இந்த தண்ணீர் தான் கதிர்வீச்சுடன் வெளியேறுகிறதா என சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ள அரசு, தற்போது அணு உலையை இயக்கி வரும் அமைப்பிடம் விடாமல் அரசே இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக உறுதி அளித்துள்ளது. மேற்கொண்டு தண்ணீர் வெளியேறாமல் இருக்க தற்காலிக சுவர் ஒன்று அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.