மரங்களின் தேவையை உணர்த்தும் வகையில் தூத்துக்குடியில் பனை உணவுத் திருவிழா

 நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வரும் பனை மரங்களின் தேவையை உணர்த்தும் வகையில் தூத்துக்குடியில் பனை உணவுத் திருவிழா நடைபெற்றது.
   மில்லர்புரத்தில் நடைபெற்ற விழாவில், பனை மரத்தில் இருந்து பெறப்படும் பதனீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கிழங்கு, பனங்கற்கண்டு ஆகியவற்றுடன் பனைக் கூடைகள், பாய்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
   கருப்பட்டி மற்றும் பனைப் பொருட்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழாவிற்கு வந்தவர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. உணவுத் திருவிழாவில் கருப்பட்டி தோசை, அப்பம் உள்ளிட்டவற்றை மக்கள் பெரிதும் விரும்பி சாப்பிட்டனர்.