தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கொள்ளை போகும் கனிமவளங்கள்



தமிழகத்தின் தென் மாவட்ட கடற்கரை பகுதிகளில் கனிம வளங்கள் சுரண்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
     தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்கரை மணலில் ஏராளமான கனிம வளங்கள் நிறைந்துள்ளன. இந்த கனிமங்களை பிரித்தெடுப்பதற்காக தினசரி பல ஆயிரம் டன் மணல் கடலோரங்களில் இருந்து அள்ளப்படுகிறது.
 விதிமுறைகளை மீறி இவ்வாறு மணல் அள்ளப்படுவதால் கடல் வளம் பாதிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலும் மாசடைவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மட்டுமின்றி, கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன.
 நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை, விஜயாபதி, கூட்டப்புளி, பெருமணல் போன்ற பகுதிகளில் மீன் வளம் மட்டுமின்றி விவசாயமும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

                                                                                 -பசுமை நாயகன்