தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5ஆவது யூனிட்டில் ஏற்பட்ட கோளாறால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
5 வது யூனிட்டின் கொதிகலனில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த
யூனிட்டில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. கொதிகலனில்
ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மொத்தம் 5 யூனிட்கள் உள்ளன.
இந்த அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அடிக்கடி
கோளாறு மற்றும் விபத்துகள் ஏற்படுகின்றன. இங்கு புதிய இயந்திரங்களை
பொருத்தினால் மட்டுமே விபத்துகளை தவிர்க்க முடியும் என தூத்துக்குடி மாவட்ட
நிர்வாகம் தெரிவித்துள்ளது.