கட்சி கட்டுபாட்டை மீறி கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராட்டம் 
நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தன் பகிரங்க 
மன்னிப்பு கோரியுள்ளார்.
கூடங்களம் அணுமின் நியைலயத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி 
வருபவர்களுக்கு ஆதரவாக கடந்த மாதம் இடிந்தகரை கிராமத்திற்கு சென்ற 
அச்சுதாநந்தனை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய 
அச்சுதானந்தன், தடையை மீறி கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு சென்றது தனது 
தவறு என்று கூறியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு குறித்து 
விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
