உலக மீனவர் தினம் : நெல்லை, தூததுக்குடியில் போராட்டங்கள்

      உலக மீனவர் தினத்தையொட்டி, நெல்லை, தூததுக்குடி மற்றும் குமரி மாவட்ட மீனவர்கள் நேற்று கூடங்களம் அணுஉலையை மூடக் கோரி போராடட்ம் நடத்தினர். பிற மாவட்டங்களில், அந்தந்த ஊர் பிரச்சனைகளை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.
உலக மீனவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
அணுஉலை பிரச்சனை தொடர்பாக, இந்த ஆண்டு மீனவர் தினத்தை ஒரு துக்க நாளாகவே பெரும்பாலான மாவட்ட மீனவர்கள் அனுசரித்தனர். குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவங்களில் அணுமின் நிலையத்தை மூடக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மாவட்ட ஆட்சியர் இல்லாததால், அவரிடம் கொடுப்பதற்காக வைத்திருந்த மனுவை, தாமிரபரணி ஆற்றில் விட்டனர். இடிந்தகரை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப பேசிய உதயகுமார், பல்வேறு போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மீனவ மக்களின் நலன் காக்க வலியுறுத்தப்பட்டது.
சென்னை முட்டுக்காடு பகுதியில் மீனவ மக்களின் நிலங்களை மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தினன் குடும்பத்தினர் அபகரிப்பதாக புகார் எழுந்துள்ளது, இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.